நேசப்பிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும்
பாசமுடன் என்னை அணைத்திடனும் - 2
தந்துவிட்டேன் என்னை உம் கரத்தில் - 2
ஆசீர்வதியுமைய்யா - 2 - நேசப்பிள்ளை
நல்ல பிள்ளையாக உம்மோடு நான் இருப்பேன்
நாளெல்லாம் உம்மையே பற்றிக்கொள்வேன் - 2
தொல்லைகள் இல்லையையா
வாழ்வெல்லாம் இன்பம் ஐயா
அப்பா உம்மோடு வாழ்வதினால் - 2 - நேசப்பிள்ளை
உம் சத்தம் கேட்டிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன்
உம் தூய வழியில் நடந்திடுவேன் - 2
உள்ளத்தின் ஆனந்தமே
இல்லத்தின் பேரின்பமே
அப்பா நீர் எந்தன் நிரந்தரமே - 2 - நேசப்பிள்ளை
நம்பிக்கை தந்தீரைய்யா நங்கூரமானீரைய்யா
நாளெல்லாம் பாடுவேன் மகிழ்ந்திருப்பேன் - 2
கவலைகள் இல்லையையா
கலக்கமும் இல்லையையா
அப்பா நீர் என்னோடு இருப்பதினால் - 2 - நேசப்பிள்ளை